பொலிக! பொலிக! 12

யாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தாள். ஒரு விஷயம் இருக்கிறது. நெடுநாள் உறுத்தல். அதை ராமானுஜரிடம் சொல்லவேண்டும். அதன்மூலம் என்னவாவது நல்லது நடக்கவேண்டும். முடியுமா? ‘அம்மா, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். எதற்காகத் தயக்கம்?’ என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும் அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் சம்மந்தப்பட்டிருந்தது அவளது மகன் யாதவப்பிரகாசர். அவருக்குத் தெரியாமல்தான் அவள் காஞ்சிக்கு வந்திருந்தாள். கேட்டால், கோயிலுக்குப் போனதாகச் சொல்லிக்கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால் ராமானுஜரை தரிசிப்பதே அவளது காஞ்சி … Continue reading பொலிக! பொலிக! 12